2 ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது...

இரண்டாம் வகுப்பு வரை வீட்டு பாடம் கொடுக்க கூடாது என்ற உத்தரவை அமல்படுத்த தவறினால், அனைத்து மாநில பள்ளிகல்வித்துறை செயலாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Update: 2018-08-11 02:46 GMT
இரண்டாம் வகுப்பு வரை வீட்டு பாடம் கொடுக்க கூடாது என்ற உத்தரவை அமல்படுத்த தவறினால், அனைத்து மாநில பள்ளிகல்வித்துறை செயலாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 

இது தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்த சிபிஎஸ்சி பள்ளிகள் தரப்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும் என கூறி விசாரணையை அன்றைய தினத்திற்கே ஒத்தி வைத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்