பாஜக கொறடாவாக அனுராக் தாக்கூர் நியமனம்
பதிவு: ஜூலை 17, 2018, 09:43 PM
பி.சி.சி.ஐ முன்னாள் தலைவரும்  இமாச்சல் மாநிலத்தின் எம்.பியுமான அனுராக் தாக்கூர், நாடாளுமன்ற மக்களவை பாஜக தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டு உள்ளார். பாஜக தலைமை கொறடாவாக இருந்த ராகேஷ் சிங், மத்திய பிரதேச தலைவராக நியமிக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக, அனுராக் தாக்கூர், இந்த முக்கிய பொறுப்பை ஏற்கிறார்.

ஒரு கட்சியின் கொறடாவின் உத்தரவுக்கு ஏற்ப, அக்கட்சி எம்பிக்கள் அவையில் செயல்பட முடியும். கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டால், உறுப்பினர்களின் பதவியை பறிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.