மோனோ ரயில் திட்டம் ரத்து - அன்புமணி வரவேற்பு

இயலாமையை தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளது;

Update: 2018-07-04 10:57 GMT
சென்னை மோனோ ரயில் திட்டம் ரத்து செய்யப்பட்டதன் மூலம் தனது இயலாமையை தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். சென்னைக்கு சற்றும் ஒத்துவராத மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்தியே தீருவது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருந்ததாக அன்புமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை உணர்ந்து கைவிட்டிருப்பது வரவேற்க வேண்டிய நடவடிக்கை என்றும் அவர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்