இரட்டை இருப்பிட சான்றிதழ் - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

இரட்டை இருப்பிட சான்றிதழ் பெற்று தமிழக மருத்துவ கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் எத்தனை பேர் என்பதை ஆய்வு செய்து பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-07-04 02:28 GMT
இரட்டை இருப்பிட சான்றிதழ் பெற்று தமிழக மருத்துவ கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் எத்தனை பேர் என்பதை ஆய்வு செய்து  பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வசிப்பதாக இரட்டை இருப்பிட சான்றிதழ் பெற்று தமிழக மருத்துவ கல்லூரிகளில் சேருவதை தடுக்க கோரி புதுக்கோட்டையை சேர்ந்த விக்னயா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட மற்ற மாநில மாணவர்கள் தற்போது தமிழக மருத்துவ கல்லூரிகளில் விண்ணப்பித்து உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி கிருபாகரன் வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் எத்தனை பேர் தமிழகத்தில் இரட்டை இருப்பிட சான்றிதழ் பெற்று தமிழக மருத்துவ கல்லூரிகளில் படித்து வருகிறார்கள் என்பதை ஆய்வு செய்து ஜூலை 8ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

நீட் விவகாரத்தில் ஆட்சேபம் தெரிவிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் குறைந்தபட்சம் 10 ஏழை குழந்தைகளின் படிப்பு செலவுகளை ஏன் ஏற்க கூடாது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
Tags:    

மேலும் செய்திகள்