தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்...?

தமிழகத்தில் 29 பேர், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது

Update: 2018-06-28 01:46 GMT
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில், தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருந்ததாக தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஈராக் மற்றும் சிரியாவில் செயல்படும்  ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவான அடிப்படைவாதிகளின் நடவடிக்கைகளை தமிழக காவல் துறை சிறப்பு பிரிவு கண்காணித்து வந்ததாகவும்

அதில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை நோக்கி பயணித்த 29 இளைஞர்கள் கண்டறியப்பட்டு அவர்களை நல்வழிப் படுத்தும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இதுபோல, தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவாக ஏதாவது குழு உள்ளதா என கண்டறிய 'டபிக்', 'ரூமியா' போன்ற இதழ்களும், ஐ.எஸ். ஐ.எஸ். சார்பு பத்திரிகைகளும் தந்தி ஒலி அலைவரிசை, ஐ.எஸ்.ஐ.எஸ் சார்பு இணைய வானொலி மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்டவற்றை மாநில நுண்ணறிவுப் பிரிவில் உள்ள சிறப்பு குழு கூர்ந்து கண்காணித்து வருவதாகவும் காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்