ஆன்லைன் மூலம் பொறியியல் கலந்தாய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் 3 பேர் வழக்கு

அரசு அமைத்துள்ள 42 உதவி மையங்களிலும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-06-26 11:44 GMT
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ எழிலரசன் உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு, நீதிபதிகள் குளுவாடி ரமேஷ், தண்டபாணி அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 42 அரசு உதவி மையங்களில் இருந்து பன்னிரெண்டாயிரம் பொறியியல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

இதையடுத்து, 42 உதவி மையங்களிலும் பொறியியல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். கட்டணத்தை வரைவோலையாக செலுத்த மாணவர்களை அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
---
"
ஆன்லைன் மூலமாக பொறியியல் கலந்தாய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் 3 பேர் வழக்கு

42 அரசு உதவி மையங்களில் இருந்து 12,000 பொறியியல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன - அரசு தரப்பு

"42 உதவி மையங்களிலும் கலந்தாய்வை நடத்த வேண்டும் - கட்டணத்தை டிடியாக செலுத்த அனுமதிக்க வேண்டும்"
Tags:    

மேலும் செய்திகள்