காவலர் கல்லால் அடித்து கொலை, மர்மநபர்கள் வழிமறித்து வெறிச்செயல்

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே காவலர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-06-25 11:53 GMT
சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் முதுநிலை காவலராக பணிபுரிபவர் மோகன்ராஜ். அவர் பணி முடிந்து திருமங்கலம் கண்டிகை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்ருந்தார். 
அப்போது மோகன்ராஜை வழிமறித்த மர்மநபர்கள் கல்லால் அடித்து அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டிஐஜி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். மோகன்ராஜ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்