இந்தியாவில் தான் அதிக அளவில் யோகா பயிற்சி - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

உலகிலேயே அதிக அளவில் இந்தியாவில் தான் யோகா பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-21 03:15 GMT
சர்வதேச யோகா தினம் - பிரதமர் மோடி வாழ்த்து

4வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி உத்தரகாண்ட்  தலைநகர் டேராடூனில் வன ஆராய்ச்சி வளாகத்தில் சுமார் 55 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரமாண்ட யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மோடி யோகா பயிற்சி மேற்கொண்டார். 

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாட்டு மக்களுக்கு யோகா தின வாழ்த்துக்களை தெரிவித்தார். கங்கை நதி பாயும் இடத்தில் யோகா பயிற்சி மேற்கொள்வது வாழ்க்கையில் பெரும் பாக்யம் என தெரிவித்தார்.

யோகா பயிற்சி மேற்கொண்டு சூரியனை வரவேற்போம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். யோகா பயிற்சி மேற்கொள்வதால் உடல் உறுப்புகள் மற்றும் மனம் புத்துணர்ச்சி அடைவதாக குறிப்பிட்ட மோடி, அவசர பணிகளுக்கு இடையேயும் யோகா பயிற்சி மேற்கொள்வதை வாடிக்கையாக்கி கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். உலக மக்களை ஒன்றிணைக்கும் அதி தீவிர சக்தி படைத்தது யோகா எனவும் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்