பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கு, கைதான நபர் போலீசில் ஒப்புதல் வாக்குமூலம்?

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கு;

Update: 2018-06-14 13:34 GMT
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதான நபர், அவரை சுட்டுக் கொன்றதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெங்களூரு ஆர்ஆர் நகர் பகுதியில் வசித்து வந்த கவுரி லங்கேஷ், கடந்த செப்டம்பர் மாதம் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக பரசுராம் என்பவரை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கவுரி லங்கேஷை கொலை செய்ததாக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
Tags:    

மேலும் செய்திகள்