பணமழையால் நனைந்த நாட்டுப்புற பாடகர்
பதிவு: ஜூன் 11, 2018, 12:43 PM
குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த, நாட்டுப்புற பாடகர் பிரிஜ்ராஜ் காத்வியின் பக்தி இசை நிகழ்ச்சியின்போது, அவரை பார்வையாளர்கள், பணமழையால் நனைய வைத்தனர். அவரது பாடல் மற்றும் இசையால் ஈர்க்கப்பட்ட பார்வையாளர்கள், பணத்தை வாரி இறைத்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல், கடந்த 8-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும், பணம் வாரி இறைக்கப்பட்டது. லட்சக்கணக்கில் சேர்ந்த இந்தப் பணத்தை, விலங்குகளின் நலனுக்கு செலவிட இருப்பதாக அவர் தெரிவித்தார்.