8 மாதமாக பென்ஷன் வராததால் நல்ல பாம்புடன் வந்து அரசு அதிகாரியை மிரட்டிய நபர்....
8 மாதமாக பென்ஷன் வராததால் தொழிலாளி ஆத்திரம் அதிகாரியை மிரட்ட நல்ல பாம்புடன் வந்த தொழிலாளி;
கர்நாடக மாநிலத்தில் ஓய்வுபெற்ற தொழிலாளி ஒருவர் பென்ஷன் தராத அதிகாரி அலுவலகத்திற்கு பாம்புடன் சென்று மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதக் மாவட்டம் ரோனாவை சேர்ந்த ரஜேகா என்பவர், கடந்த 8 மாதமாக வரவேண்டிய பென்ஷன் தொகையை வழங்க கோரி மனு கொடுத்திருந்தார். ஆனால் அதற்கு அதிகாரிகள் சரியாக பதில் தராமல் அவரை இழுத்தடித்து வந்தனர். இதனால் கோபமடைந்த அவர் உடனடியாக பென்ஷன் வழங்குமாறு நல்லபாம்பு ஒன்றை பிடித்துவந்து அதிகாரியை மிரட்டியுள்ளார்.