"நோ மீன்ஸ் நோ.. நான் பொது சொத்து கிடையாது" - காட்டமாக பேசிய பிரபல நடிகை
தான் பிரபலமான நபர் தானே தவிர பொது சொத்து கிடையாது என புகைப்படக் கலைஞர்கள் குறித்து நடிகை டாப்சி காட்டமாக தெரிவித்துள்ளார்... தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் தன் தனிப்பட்ட சுதந்திரம் குறித்தும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகள் குறித்தும் பேசிய அவர், சினிமாவில் திரைக்கு பின் தான் நோ என்றால் அது நோ தான் என்றும்,
சினிமா தனக்கு பிடித்தமான தொழில் தான் என்ற போதிலும், திரையில் நடிப்பதைப் போல நிஜ வாழ்க்கையிலும் நடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.