சார்பட்டா பரம்பரை- ரஞ்சித்திற்கு நோட்டீஸ்

உண்மைக்கு புறம்பான காட்சிகளை வடிவமைத்ததாக கூறி சார்பட்டா பரம்பரை பட இயக்குனர் ரஞ்சித் மற்றும் அமேசான் நிறுவனத்திற்கு வழக்கறிஞர் பாபு முருகவேல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Update: 2021-08-17 03:33 GMT
உண்மைக்கு புறம்பான காட்சிகளை வடிவமைத்ததாக கூறி சார்பட்டா பரம்பரை பட  இயக்குனர் ரஞ்சித் மற்றும் அமேசான் நிறுவனத்திற்கு வழக்கறிஞர்  பாபு முருகவேல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை ஒரு வரலாற்று படமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.  வரலாற்று நிகழ்வுகளை தவறாக மக்களிடத்திலே பரப்புகின்ற விதமாகவும் உண்மைக்கு மாறான விஷயங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரலாற்றுச் சம்பவங்களில் இல்லாத ஒரு விஷயத்தை யாரையோ திருப்திப் படுத்த வேண்டும் என்பதற்காக படம் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிசா சட்டத்தில் திமுக தலைவராக உள்ள ஸ்டாலின் கைது செய்யப்படாத நிலையில் அவரை கைது செய்யப்பட்டுள்ளதாக படத்தில் தகவல்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்