'கைதி' வெளியாகி ஓராண்டு நிறைவு - படக்குழு, நடிகர்களுக்கு திரை பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் கார்த்தியின் கைதி திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.

Update: 2020-10-25 13:38 GMT
நடிகர் கார்த்தியின் கைதி திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி வெளியான இந்த படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. விஜய்யின் 'பிகில்' படத்துடன் இணைந்து வெளியான போதும் வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது. இதையடுத்து, படம் வெளியாகி ஓராண்டு ஆனதை ஒட்டி, படக்குழுவினருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்