மறைந்த நாடக நடிகர் கிரேஸி மோகனின் உடல் தகனம்...
மறைந்த நாடக நடிகர் கிரேஸி மோகனின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.;
பிரபல நாடக வசனகர்த்தாவும், நகைச்சுவை நடிகருமான கிரேஸி மோகன் நேற்று திடீரென மரணமடைந்தார். மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. மந்தைவெளியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த கிரேஸி மோகனின் உடலுக்கு நடிகர்கள் , நடிகைகள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை கிரேஸி மோகனின் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.