"கனவு காணாதீர்கள், முயற்சி செய்யுங்கள்" - மாணவர்களுக்கு, இளையராஜா அறிவுரை

சென்னை ஐ.ஐ.டி.யில், இளையராஜா 75வது பிறந்த நாள் நிகழ்ச்சி

Update: 2019-03-23 22:32 GMT
சென்னை ஐ.ஐ.டி.யில் இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் ஐஐடி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றார்.  இளையராஜாவின் பாடல்களை ஐஐடி மாணவர்கள் அவர் முன்பு பாடி அசத்தினர். பின்னர் மேடையில் பேசிய இளையராஜா, இசையமைப்பாளர்களில் அதிக பாடல்களை பாடியதும், பாடல்கள் எழுதியதும், குறைந்த நேரத்தில் அதிக படங்களுக்கு இசையமைத்தும் சாதனை புரிந்துள்ளேன் என்றார்.மாணவர்களே கனவு காணாதீர்கள், முயற்சி செய்யுங்கள் என அவர் அறிவுரை வழங்கினார். மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப பல்வேறு பாடல்களை பாடி இளையராஜா அசத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்