காமிக்ஸ் உலகின் பிதாமகன் ஸ்டேன் லீ காலமானார்

டர் மேன், அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் உலகின் பிதாமகன் ஸ்டேன் லீ (stan lee) காலமானார்.

Update: 2018-11-13 06:26 GMT
சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் ஸ்டேன் லீ பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 95. மார்வெல் காமிக்ஸ் நிறுவனம் மூலம் கேப்டன் அமெரிக்கா, எக்ஸ் மேன், அயர்ன் மேன், ஸ்பைடர்மேன் உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹீரோக்களை ஸ்டேன் லீ உருவாக்கியுள்ளார்.  

பின்னர், தனது காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்கு வெள்ளித்திரையிலும் ஸ்டான்லி உயிர் கொடுத்தார். மார்வெல் திரைப்பட உலகம் என்ற நிறுவனத்தை தொடங்கி, சூப்பர் ஹீரோக்கள் படத்தையும் தயாரித்தார். பல்வேறு சூப்பர் ஹீரோக்கள் படங்களிலும் சிறப்பு தோற்றத்தில் ரசிகர்களை ஸ்டேன் லீ கவர்ந்துள்ளார். உலகின் மிகப் பணக்கார திரைப்பட நிறுவனங்களில் ஸ்டேன் - லீயின் மார்வெல் நிறுவனமும் ஒன்று .ஸ்டான் லீ-யின் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்