இலவசங்களுக்கு எதிராக ரஜினி பேசும் வள்ளி திரைப்பட வீடியோ..

அரசின் இலவச திட்டங்களை விமர்சித்துள்ளதாக, சர்கார் திரைப்படத்தை பலரும் குற்றம்சாட்டி வரும் நிலையில் நடிகர் ரஜினி, இலவசங்களுக்கு எதிராக பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2018-11-09 06:26 GMT
அரசின் இலவச திட்டங்களை விமர்சித்துள்ளதாக, சர்கார் திரைப்படத்தை பலரும் குற்றம்சாட்டி வரும் நிலையில் நடிகர் ரஜினி, இலவசங்களுக்கு எதிராக பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரஜினி எழுதி நடித்த வள்ளி திரைப்படத்தில் வரும் அந்தக் காட்சியில், "வேலைவெட்டி கிடைத்தால் சேலை வேட்டி தானாக கிடைக்கும்" எனவும், இலவசங்களின் பின்னால் போகாதீர்கள் எனவும் மக்களுக்கு அறிவுரை வழங்கியிருப்பார். வள்ளி படம் வெளியான 1993-ஆம் ஆண்டில், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்