ஜூனியர் என்.டி.ஆரின் தந்தை ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் சிக்கி மரணம்

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் என்.டி. ஆரின் மகனும் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் உயிரிழந்தார்.

Update: 2018-08-29 04:10 GMT
இன்று அதிகாலையில் தெலங்கானாவின் நலகுண்டா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஹரிகிருஷ்ணாவின் கார், எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதியது. இதனால் கார், மூன்று முறை உருண்டு தூக்கி வீசப்பட்டது. இதில் படுகாயமடைந்த ஹரிகிருஷ்ணாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த ஹரிகிருஷ்ணா,  தற்போதைய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் உறவினர் என்பதும், தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்