விளையாட்டு திருவிழா (07.12.2018) - இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்
பதிவு : டிசம்பர் 07, 2018, 08:21 PM
விளையாட்டு திருவிழா (07.12.2018) - அடிலெய்ட் மைதானத்தில் சாகச பயணம்
விளையாட்டு திருவிழா (07.12.2018)

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்
அடிலெய்ட் நடைபெற்று வரும் இப்போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, சான் மார்ஷ் ஆகியோர் தமிழக வீரர் அஸ்வின் பந்துவீச்சில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். PETER HANDSCOMB 34 ரன்கள் எடுத்திருந்த போது தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். அந்த அணியின் TRAVIS HEAD மட்டும் பொறுப்புடன் விளையாடி அரைசதம் விளாசினார். 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. இது இந்திய அணியை விட 59 ரன்கள் குறைவாகும். ஆஸதிரேலிய அணி அதன் சொந்த மண்ணில் தற்காப்பு ஆட்டத்தை ஆடுவதை என் அனுபவத்தில் நான் பார்த்ததில்லை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இந்தியா இந்த வாய்ப்பை விடாமல் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனவும் சச்சின் வலியுறுத்தியுள்ளார்.  6 விக்கெட்டு இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து ஆஸதிரேலிய அணி தடுமாறிய போது, விக்கெட்டுகளை எடுக்க இந்தியா தீவிரம் காட்டாமல் போனது. ரன் அடிக்க எதுவாக FIELDING-உம் மாற்றப்பட்டது. இதனை TRAVIS HEAD பயன்படுத்தி அரைசதம் விளாசினார். இதில் இந்தியா கவனம் செலுத்தி இருந்தால் ஆஸதிரேலியாவை இந்நேரம் சுருட்டி இருக்கலாம் என்பது கிரிக்கெட் விமர்சகர்களின் வாதம். அஸ்வின் தவிர வேறு சுழற்பந்துவீச்சாளர் இல்லாததால் முரளி விஜய் பந்து வீசும் நிலை ஏற்பட்டது. ரோஹித் சர்மாவுக்கு பதில் ஜடேஜா அல்லது விஹாரி இருந்திருந்தால், இந்தியாவுக்கு அது பலமாக இருந்திருக்கும். 

அடிலெய்ட் மைதானத்தில் சாகச பயணம்
கிரிக்கெட் பிதாமகன் டான் பிராட்மேனின் சொந்த ஊர் அடிலெய்ட்.. அப்படி பட்ட ஊரில் வித்தியாசமான கிரிக்கெட் மைதானம் இருக்க வேண்டாமா..?? அதற்கான விடை தான் அடிலெய்ட் ஓவல் மைதானம்.. சுமார் 50 ஆயிரம் பேர் பார்க்கும் வசதி கொண்ட இந்த அதிநவீன மைதானத்தின் சிறப்பம்சமே நீங்கள் மைதான கூரையில் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை ரசிக்கலாம். பறந்து விரிந்துள்ள இந்த மைதான கூரையின் மீது ஏறி, நீங்கள் சுற்றி வரலாம். 160 அடி உயரத்தில் பார்வையாளர்கள் வலம் வரும் போது, வாழ்வின் மறக்க முடியாத அனுபவமாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது இருக்கும். பாதுகாப்பு அம்சம் உள்ளிட்ட பல கருவிகள் இருப்பதால், பார்வையாளர்களுக்கு பயம் துளியும் தேவையில்லை. கிரிக்கெட் போட்டி நடைபெறும் போதும் சரி, சாதாரண நாட்களிலும் சரி. பார்வையாளர்கள் கூரை மீது ஏறி செல்ல அனுமதிக்கப்படுவார்கள். கூரை மீது செல்லும் இந்த சாகசத்திற்கான செலவு இந்திய  ரூபாய் மதிப்பில் ஒருவருக்கு 12 ஆயிரத்து நூறு ரூபாய் மகட்டணம்.

உயிருக்கு போராடும் குத்துச்சண்டை வீரர்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்  போட்டியில் நாக் அவுட் ஆன கனடா வீரர் STEVENSON தற்போது உயிருக்கு போராடி வருகிறார். கனடாவில் மாண்டிரில் நகரில் light heavyweight title பட்டத்திற்கான போட்டியில் உக்ரைன் வீரர் Oleksandr Gvozdyk-விடம் STEVENSON மோதினார். இதில் 11வது சுற்றில் STEVENSON நாக் அவுட் ஆனார். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனைக்கு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதில் STEVENSON க்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது மருத்துவ சோதனையில் தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் STEVENSON  கவலைக்கிடமான நிலையில் தான் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். STEVENSON தொடர்ந்து 17 போட்டிகளில் நாக் அவுட் முறையில் வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தார். STEVENSON னுக்கு ஏற்பட்ட காயத்தை அடுத்து குத்துச்சண்டை போட்டியில் வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

டென்னிஸ் களத்தில் நாய்களின் சுட்டித்தனம்
டென்னிஸ் போட்டியில் மிக முக்கியமான நபர்கள், BALL BOYS...இப்போது அந்த இடத்திற்கு செல்லப் பிராணிகளான நாய்கள் வர உள்ளன. டென்னிஸ் போட்டியின் போது வீரர்கள், வீராங்கனைகளுக்கு பந்தை எடுத்து வரும் பொறுப்பை இனி இந்த குட்டி நாய்கள் பார்த்துக் கொள்ளும். இதற்காக நாய்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, சோதனை முயற்சியாக சாம்பியன்ஸ் டென்னிஸ் தொடரில் பயன்படுத்தப்பட்டன. பந்தை தராமல் நாய்கள் செய்யும் சேட்டை பல்வேறு தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றன. BALL Boys க்கு பதிலாக BALL DOGS முதல் முறையாக 2016 ஆம் ஆண்டு பிரேசில் ஓபன் டென்னிஸ் தொடரில் பயன்படுத்தப்பட்டது. நாய்களுடன் விளையாடுவது புதிய அனுபவத்தை, மன நிம்மதியும் தருவதாக வீரர்கள் இந்த திட்டத்திற்கு பச்சை கொடி காட்டினர். ஆதரவற்ற தெரு நாய்களை தத்தெடுத்து, அதற்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கி, கிராண்ட் ஸ்லாம் தொடரில் பயன்படுத்த முயற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. SERIOUS ஆன கதைகளில், காமெடி சீன்கள் வருவது போல், இனி டென்னிஸ் போடடிகளில் இந்த நாய்களின் சேட்டைகளும் அரங்கேறும். 


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.