விளையாட்டு திருவிழா (04.12.2018) : ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர் - இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு?
பதிவு : டிசம்பர் 04, 2018, 09:56 PM
விளையாட்டு திருவிழா (04.12.2018) : 2019-சென்னை மாரத்தான் போட்டி
விளையாட்டு திருவிழா (04.12.2018)

சாதனை படைக்குமா இந்திய அணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் எந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணி வெற்றி பெறும் என்பது குறித்து விளக்குகிறார் நமது செய்தியாளர் ஜாவித்.. 

சூப்பர் கிராஸ் பைக் சாகச பந்தயம்

தேசிய சூப்பர் கிராஸ் பைக் சாம்பியன்ஷிப் தொடர் குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்றது. இந்த தொடரில் 800க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக 7 வயது மட்டுமே நிறைந்த சிறுவன் ஒருவர் கலந்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில், வீரர்கள் மேற்கொண்ட பைக் சாகசம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. இந்தியாவிலும் இது போன்ற போட்டிகள் நடைபெறுவது வியப்பில் ஆழ்த்தியதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். இந்த சாகசங்களை மேற்கொள்ளும் வீரர்களுக்கு உதவி கிடைத்தால், சர்வதேச அளவில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைக்கும். 

2019-சென்னை மாரத்தான் போட்டி
2019 ஆம் ஆண்டிற்கான சென்னை மாரத்தான் போட்டி வரும் ஜனவரி 6ம் தேதி  நடைபெறுகிறது. 7 ஆண்டாக நடத்தப்படும் இந்த மாரத்தான் போட்டியில் 25 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். இதன் பரிசுத் தொகை மற்றும் 25லட்சம் ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்,  மாரத்தானுக்கான ஜெர்சி மற்றும் வெற்றிக் கோப்பையை அறிமுகப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் கார்த்திக், மாரத்தான் போட்டியில் பலரும் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வாழ்த்துக்களை கூறினார். 

தங்க கோப்பை கால்பந்து விருது வென்ற மோட்ரிச்

கால்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெறுகிறது. 2018ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான தங்க கால்பந்து கோப்பை விருதை குரோஷிய வீரர் லூகா மோட்ரிச்(LUKA MODRIC) வென்று சாதனை படைத்தார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த விருதை அர்ஜென்டின வீரர் மெஸ்ஸி ,போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இருவரையும் தவிர வேறு யாரும் வென்றதில்லை.  கடந்த 10 ஆண்டுகளில் ரொனால்டோ, மெஸ்ஸியை தவிர இந்த விருதை வென்றவர் பிரேசில் வீரர் காகா.. அதன் பிறகு மோட்ரிச் இந்த பெருமையை பெற்றுள்ளார். 22 வயதுக்குட்பட்டவர்களுக்கான சிறந்த வீரர் என்ற விருதை பிரான்ஸ் வீரர் கெலியான் எம்பாப்பே கைப்பற்றினார். இதே போன்று சிறந்த வீராங்கனைக்கான தங்க கால்பந்து கோப்பை விருது முதல் முறையாக வழங்கப்பட்டது. அதனை நார்வே வீராங்கனை Hegerberg வென்றார். கோப்பை வென்ற வீராங்கனையிடம் ஆபாச நடனமாடுமாறு, தொகுப்பாளர் தெரிவிக்க, சர்ச்சை வெடித்தது. இந்த கேள்வியால் வீராங்கனை அதிர்ச்சி அடைந்ததை அறிந்த தொகுப்பாளர் உடனடியாக மன்னிப்பு கோரினார். பத்திரிகையாளர்கள், கால்பந்து அணியின் பயிற்சியாளர்கள் அளிக்கும் வாக்குகளை பொருட்டே இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

மெக்சிகோவில் நடந்த பாய்மரப்படகு போட்டி சாம்பியன் பட்டம் வென்ற சுவிட்சர்லாந்து

EXTREME SAILING எனப்படும் பாய்மரப்படகு போட்டி மெக்சிகோவில் நடைபெற்றது. LOS CABOS கடற்பகுதியில் இந்த விறுவிறுப்பான பந்தயத்தில், 7 அணிகளை சேர்ந்தவர்கள் கடுமையாக போட்டி போட்டனர். கடற்கரையோர பகுதியில் தான் இந்த வகையிலான போட்டி நடைபெறும். இதில் பயன்படுத்தப்படும் படகு அதிகபட்சமாக மணிக்கு 72 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த பந்தயத்தில் அதிக புள்ளிகள் பெற்று சுவிட்சர்லாந்தை சேர்ந்த அணி முதலிடத்தை பிடித்தது. 141 புள்ளிகளை பெற்ற சுவிட்சர்லாந்து அணி கோப்பையுடன் உற்சாகமாக கொண்டாடினர். 
ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.