விளையாட்டு திருவிழா - 03.12.2018 - ஆஸி. லெவனுக்கு எதிரான பயிற்சி ஆட்டம் - சமன் செய்தது இந்திய அணி

விளையாட்டு திருவிழா - 03.12.2018 - பந்துவீசி விக்கெட்டை வீழ்த்திய கோலி
விளையாட்டு திருவிழா - 03.12.2018 - ஆஸி. லெவனுக்கு எதிரான பயிற்சி ஆட்டம் - சமன் செய்தது இந்திய அணி
x
விளையாட்டு திருவிழா - 03.12.2018

தமிழக வீரர் முரளி விஜய் சதம்

இந்தியா, ஆஸ்திரேலியா லெவனுக்கு இடையிலான 4 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. சிட்னியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் நாள் மழையால் ரத்து செய்யப்பட்டது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 358 ரன்களும், ஆஸ்திரேலிய லெவன் அணி 544 ரன்களும் குவித்தது. 196 ரன்கள் பின் தங்கிய நிலையில், இந்திய அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. தமிழக வீரர் முரளி விஜய் 129 ரன்களும், கே.எல்.ராகுல் 62 ரன்களும் எடுத்தனர். முரளி விஜய் ஒரு ஓவரில் 26 ரன்கள் விளாசி அசத்தினார். இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது. இந்த ஆட்டத்தின் போது காயம் ஏற்பட்டதால் பிரித்திவி ஷாவுக்கு காயம் ஏற்பட்டதால், அவர் முதல் டெஸ்டில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்சில் சோபிக்க தவறிய ராகுல் இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் விளாசினார். கோலி, புஜாரா, ரஹானே, உள்ளிட்ட இந்திய அணியின் முக்கிய வீரர்கள் அரைசதம் விளாசி நல்ல பார்மில் உள்ளனர். இருப்பினும் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறினர். விக்கெட் கீப்பரை தவிர இந்திய அணியை சேர்ந்த 10 வீரர்களும் பந்துவீசினர். ஆஸ்திரேலிய அணியை 500 ரன்களுக்கு மேல் அடிக்கவிட்டதில் இந்திய அணிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று புஜாரா தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் 10 வீரர்களும் பந்துவீசினர்

ஆஸ்திரேலிய லெவனுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கேப்டன் கோலி பந்துவீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். சிட்னியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சதம் விளாசிய நீல்சனின் விக்கெட்டை கோலி வீழ்த்தினார். விக்கெட்டை வீழ்த்தியதை நம்ப முடியாமல் சிரித்த கோலி பின்னர் கொண்டாடினார். 

உலக கோப்பை ஹாக்கி தொடர் - இந்தியா, பெல்ஜியம் ஆட்டம் டிரா
உலக கோப்பை ஹாக்கி லீக் தொடரில் சி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா அணி 2 போட்டி முடிவில் முதலிடத்தை பிடித்துள்ளது. முதலில் தென்னாப்பிரிக்காவை 5க்கு0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பெல்ஜியத்துடன் இந்தியா பலப்பரீட்சை நடத்தியது. இரு அணி வீரர்களும் அதிரடியாக விளையாடியதால் போட்டியில் அனல் பறந்தது. ஒரு கட்டத்தில் இந்தியா 2 க்கு1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது, 56வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி, பதில் கோல் அடித்து  போட்டியை சமன் செய்தது. இந்த தொடரில் ஹர்மன்பிரித், சிம்ரன்ஜித், வருண் குமார் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். வரும் டிசம்பர் 8ஆம் தேதி கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றாலே காலிறுதி சுற்றுக்கு முன்னேறிவிடும்.

தோனிக்கு நடனம் கற்றுத் தரும் மகள்...

மகேந்திர சிங் தோனிக்கு அவரது மகள் ஸிவா தோனி நடனம் கற்றுக் கொடுக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

RED BULL 400!! சாகச விளையாட்டுக்கும் வித்தியாசமான போட்டிகளுக்கம் பெயர் போன RED BULL நிறுவனம் உருவாக்கியது தான் இது.. 

400 மீட்டர் ரிலே ஓட்டத்தை 140 மீட்டர் உயரம் உள்ள சாய்வான பாதையில் ஓடினால் எப்படி இருக்கும்.. கேட்கும் போது சாதாரணமாக இருந்தாலும், இந்தப் போட்டிக்கு வீரர், வீராங்கனைகள் ஒரு மாதத்திற்கு முன்பே தயாராகுகின்றனர். ஸ்கீ ஜம்ப்க்கு பயன்படுத்தப்படும் தளத்தில், இந்தப் போட்டி நடைபெறுகிறது. முதலில் தரையில் 100 மீட்டரில் தொடங்கும் போட்டி, அடுத்து சாய்வான பாதையில் மாறும். கிட்ட தட்ட மலையேறும் போட்டி போல் தான். சாய்வான பாதையில் ஓடுவது மாடிப்பாடியில் ஓடுவது போன்ற அனுபவத்தை தரும்.  400 மீட்டரை எந்த அணி முதலில் நிறைவு செய்கிறதோ அவர்களே சாம்பியன். எவ்வளவு தூரம் நம்மால் போராட முடிகிறது என்பதை  சோதிக்கும் வித்தியாச விளையாட்டு தான் இந்த RED BULL 400.


Next Story

மேலும் செய்திகள்