ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்
பதிவு : டிசம்பர் 12, 2018, 08:06 AM
மாற்றம் : டிசம்பர் 12, 2018, 08:08 AM
பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில்  மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கலசங்களில் கொண்டுவரப்பட்ட புனித நீர் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி மூலஸ்தானங்கள் மற்றும் ராஜகோபுர  விமானங்கள் மீது வேத மந்திரங்கள் முழங்க  பூஜிக்கப்பட்டது. முதல்கட்ட கும்பாபிஷேகம் கடந்த 9ம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று நடைபெற்ற 2ம் கட்ட கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.