இந்தியர்களுக்கு சீனா சொன்ன குட்நியூஸ்

இந்திய மாணவர்கள் சீனாவில் மீண்டும் படிப்பைத் தொடர சீனா அனுமதி அளித்துள்ளது.
x
இந்தியர்களுக்கு சீனா சொன்ன குட்நியூஸ்

இந்திய மாணவர்கள் சீனாவில் மீண்டும் படிப்பைத் தொடர சீனா அனுமதி அளித்துள்ளது.

சீனாவில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் பயின்று வரும் நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவம் படிப்பவர்கள்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019ல் இந்திய மாணவர்கள் சீனாவில் இருந்து திரும்பிய நிலையில், சீனா விதித்த போக்குவரத்து கட்டுப்பாடுகளால் அவர்கள் மீண்டும் சீனா செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

சீனாவில் நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டாலும், இந்திய மாணவர்கள் ஆன் லைனிலேயே படிக்க வேண்டிய சூழல் நிலவி வருவதால், இந்திய அரசு பல முறை சீனாவுக்கு இது குறித்து எடுத்துரைத்தது.

இந்நிலையில், தற்போது மீண்டும் இந்திய மாணவர்கள் சீனாவில் படிப்பைத் தொடர அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

அவசியம் சீனா வர வேண்டிய மாணவர்களின் பட்டியலை இந்தியா அளித்தால், அவர்களை மட்டும் அனுமதிக்க சீனா தயாராக உள்ளதாக சீன அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்