மனித உரிமை மீறல்களை மறைக்க பாகிஸ்தான் முயற்சி
பதிவு : நவம்பர் 02, 2020, 11:55 AM
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள கில்கிட்-பல்டிஸ்தான் பிராந்தியத்துக்கு மாகாண அந்தஸ்து வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கில்கிட்- பல்டிஸ்தான் உள்பட ஜம்மு- காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் ஆகும். 1947-ம் ஆண்டு, இந்தியாவுடன் காஷ்மீர் சட்ட ரீதியாக இணைந்த போதே இது உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள  கில்கிட்-பல்டிஸ்தான் பகுதிக்கு  தற்காலிகமாக மாகாண அந்தஸ்து வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார். 

இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள கில்கிட்-பல்டிஸ்தான் மீது பாகிஸ்தானுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். 

கில்கிட்-பல்டிஸ்தானில்  நடக்கும் மனித உரிமை மீறல்களையும் மறைக்கவே தற்காலிக மாகாண அந்தஸ்து வழங்கப்படும் என்ற அறிவிப்பை  பாகிஸ்தான்வெளியிட்டுள்ளதாகவும், அதை இந்தியா  நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள கில்கிட்-பல்டிஸ்தான் பகுதியிலிருந்து பாகிஸ்தான் 
உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் 
அனுராக் ஸ்ரீவஸ்தவா கேட்டு கொண்டுள்ளார். 

பிற செய்திகள்

ஆக்ஸ்போர்டு பல்கலை - ஆஸ்டிரா செனிகாவின் கூட்டு முயற்சி : "70% சிறப்பான பலனளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து"

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம், ஆஸ்டிரா செனிகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து, 70 சதவீதம் சிறப்பான பலனை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

8 views

பனியில் விளையாடும் பாண்டா கரடிகள் - உருண்டு, புரண்டு உற்சாகம்

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குயிங்காய் மாகாணத்தில் பனிப்பொழிவு தொடங்கி உள்ள நிலையில், சைனிங் நகரில் உள்ள பூங்காவில் பாண்டாக் கரடிகள் விளையாடி மகிழ்ந்தன.

62 views

எத்தியோப்பியாவில் நீடிக்கும் உள்நாட்டுப்போர் - சூடானில் அகதிகளாகும் மக்கள்

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வரும் நிலையில், நாட்டில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள், தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

67 views

வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்கும் ரோபோட்டுகளின் செயலால் மகிழ்ச்சி அடையும் வாடிக்கையாளர்கள்

ஜப்பான் வணிக வளாகங்களில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க பிரத்யேக ரோபோட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

29 views

"பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகியதில் உறுதி" - ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகியதில் உறுதியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

46 views

போராட்டத்தில் வன்முறை வெடிப்பு- நாடாளுமன்றத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.