"கோவாக்சின் தடுப்பூசி - 3 ஆம் கட்ட பரிசோதனை செய்ய அனுமதி" - ஐ.சி.எம்.ஆர் அறிக்கை

கொரோனா தடுப்பூசிகளை பரிசோதிப்பதில் 3 நிறுவனங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளதாக, ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி - 3 ஆம் கட்ட பரிசோதனை செய்ய அனுமதி  - ஐ.சி.எம்.ஆர் அறிக்கை
x
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், கோவிட் பாதிப்பு அடைந்துள்ளவர்களில், 5 வயதிற்குட்பட்டவர்கள், எண்ணிக்கை மிக  குறைவாக உள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.
கொரோனா இறப்பு எண்ணிக்கையில் மாசுவின் பங்களிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக, ஐ.சி.எம்.ஆர் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கையில், 17 வயதிற்கு குறைவானவர்கள், 8 சதவிகிதம் பேர் என, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிகளை பரிசோதிப்பதில் 3 நிறுவனங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளன என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசியை 3-வது கட்ட பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கேடிலா தடுப்பூசி 2- ம் கட்ட சோதனைக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும்,  சீரம் தடுப்பூசி 2 பி சோதனையை எட்டியுள்ளது என ஐ.சி.எம்.ஆர். கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்