அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு சேகரிப்பு தீவிரம் - மேயின் மாகாணத்தில் ஆதரவு திரட்டிய டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவுக்கு 10 நாட்களுக்கு குறைவாக உள்ள நிலையில் வாக்கு சேகரிப்பு தீவிரம் அடைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவுக்கு 10 நாட்களுக்கு குறைவாக உள்ள நிலையில், வாக்கு சேகரிப்பு தீவிரம் அடைந்துள்ளது. மேயின் மாகாணத்தில் உள்ள பழத்தோட்ட பண்ணையில் உள்ள தமது ஆதரவாளர்களிடம் அதிபர் டிரம்ப் நேற்று வாக்கு சேகரித்தார். . தமது ஆதரவாளர்கள் அளித்த தொப்பி மற்றும் பூசணிக்காய் ஆகியவற்றில் கையொப்பமிட்டு உற்சாகப்படுத்தினார். டிரம்ப் ஆதரவாளர்கள் யாரும் முக கவசமோ, சமூக இடைவெளியோ கடைபிடிக்காத நிலையில், அவர்களோடு கலந்துரையாடி மகிழ்ந்தார் டிரம்ப்.
Next Story