கராச்சி பங்குச்சந்தையில் நடந்த தாக்குதலின் பின்னணியில் இந்தியா உள்ளது - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றச்சாட்டு

கராச்சி பங்குச்சந்தையில் நடந்த தாக்குதலின் பின்னணியில் இந்தியா உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.
கராச்சி பங்குச்சந்தையில் நடந்த தாக்குதலின் பின்னணியில் இந்தியா உள்ளது - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றச்சாட்டு
x
கராச்சி பங்கு சந்தையில் கடந்த திங்கள் கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக நாடளுமன்றத்தில் பேசிய இம்ரான்கான், மும்பையில் என்ன நடந்ததோ அது பாகிஸ்தானிலும்  நடக்க வேண்டும் எனஇந்தியா நினைப்பதாகவும், நாட்டில் நிலையற்ற தன்மை ஏற்பட வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு என தெரிவித்தார். இந்த தாக்குதலின்  பின்னணியில் இந்தியா உள்ளதாகவும், இதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் இம்ரான்கான் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்