சீனக் குழந்தைகளுக்கு பள்ளிகள் திறந்தன - சமூக இடைவெளிக்காக புதிய தொப்பி

உலகம் முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில் பள்ளிக் குழந்தைகளிடையே சமூக இடைவெளியை உறுதி செய்வது கடினம்தான்.
சீனக் குழந்தைகளுக்கு பள்ளிகள் திறந்தன - சமூக இடைவெளிக்காக புதிய தொப்பி
x
சீனாவில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. பள்ளிகளில் பெரிய வகுப்புகள் மெல்ல மெல்ல துவக்கப்பட்டு விட்டன. அவர்கள் பொறுப்புடன் மாஸ்க் அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள் சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால், மிகச் சமீபத்தில் சிறிய வகுப்புகளில் படிக்கும் சிறார்களுக்கும் பள்ளிகளை திறந்தார்கள் சீனாவில். அவர்களிடையே சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காகவே Hangzhou பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் விசேஷ தொப்பியை வடிவமைத்திருக்கிறார்கள். இந்தத் தொப்பியில் இடதுபக்கம் அரை மீட்டர், வலது பக்கம் அரை மீட்டர் என பட்டை ஒன்று நீண்டிருக்கும் இதனால் ஒரு மீட்டர் இடைவெளிக்குள் யாரும் வர முடியாது. பழங்கால சீனாவில் நீதிமான்கள் அணிந்த தொப்பியாம் இது. அது கொரோனா காலத்தில் கை கொடுக்க வேண்டும் என விதி இருந்திருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்