தமிழகத்தில் லட்சத்தை தொடுமா கொரோனா தாக்குதல்? - அதிர்ச்சியளிக்கும் அமெரிக்க ஆய்வு முடிவு

தமிழகத்தில் கொரோனா தாக்குதல் ஒரு லட்சத்தை எட்டும் என அமெரிக்கா ஆய்வு அறிக்கை வெளியிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் லட்சத்தை தொடுமா கொரோனா தாக்குதல்? - அதிர்ச்சியளிக்கும் அமெரிக்க ஆய்வு முடிவு
x
உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் எப்படி இருக்கும் என நோய் இயக்கம் பொருளாதார கொள்கை என்ற அமைப்பும், அமெரிக்காவின் ஜாம் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகமும் இணைந்து பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு மாநில மக்கள் தொகை, கொரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை கொண்டு இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இனிவரும் நாட்களில் 60 ஆயிரம் பேர் வரை கொரோனாவால் தாக்கப்படலாம் என்றும், நிலைமை மோசமானால் ஒரு லட்சம் வரை அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் வெளியே நடமாடுவதை குறைத்துக் கொண்டால் தான் நோய் தாக்குதல் குறையும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதை விட வரும் ஏப்ரல், மே மாதங்களில் நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, ஒருவருக்கு ஒருவர் உடனான தொடர்பை துண்டிப்பதே நன்மை பயக்கும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்