சீனாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? - 76 கோடி மக்கள் வீடுகளில் முடக்கம்

கொரோனா வைரஸை, சீனா ஆரம்பத்திலேயே கண்டு பிடித்திருந்தால், மிகப்பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படாமல் தவிர்த்திருக்க முடியும் என பிரிட்டன் பல்கலைக் கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சீனாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? - 76 கோடி மக்கள் வீடுகளில் முடக்கம்
x
* மார்ச் 19 ஆம் தேதி நிலவரப்படி, சீனாவின் வுகான் மாகாணத்தில், புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்பதே தற்போது ஆறுதல் அளிக்கும் தகவலாக உள்ளது.

* டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி தொடக்கத்திலேயே இந்த நோய் தாக்கம் குறித்த அறிகுறிகள் இருந்தாலும், சீனா உடனடியாக விழித்துக் கொள்ளவில்லை. வழக்கமான நோய் தொற்றுபோல நினைத்ததுதான் இவ்வளவு விபரீதத்திற்கு காரணம்.

* ஆனால் அதற்கடுத்து, போர்க்கால அடிப்படையில் சீனா நடவடிக்கைகளை மேற்கொண்டது. முதலில் அது பரவுவதை தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

* ஹூபெய் உள்ளிட்ட 6 நகரங்களில் 6 கோடி மக்கள் வசிக்கும் நிலையில்,  விமானங்கள், ரயில்கள் நிறுத்தப்பட்டன. சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டது. 

* சீனாவில் பெரும்பாலான நகரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டது.  உணவு மருத்துவ தேவைகளுக்கு  மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

* சுமார் 76 கோடி மக்கள் வீடுகளிலேயே தஞ்சமடைந்தனர்.  

* சீனாவின் மருத்துவ சேவை வேகமும் நோய் தொற்று  குறைந்ததற்கு முக்கிய காரணம்.

* உடனடியாக 6 நாட்களில் ஆயிரத்து 300 படுக்கை வசதிகளைக் கொண்ட ஒரு மருத்துவமனையும், 15 நாட்களில் மற்றொரு  மருத்துவமனையும் புதிதாக கட்டப்பட்டது.

* வழக்கமான மருத்துவமனைகளையும் கொரோனா சிகிச்சைக்காக அரசு ஒதுக்கியது. அந்த மருத்துவமனைகளில் அவசர அறுவை சிகிச்சைகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டன. 

* பல மருத்துவ ஆலோசனைகள் ஆன்லைன் வழியாக அளிக்கப்பட்டன. இப்படியான கடும் வழிகளை கையாண்டதன் விளையாவாக தற்போது கொரோனா பரவல் சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

* ஆனால், சீனா ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தி இருக்க வேண்டிய நோய்க்கு, உலகம் கொடுத்துள்ள விலை அதிகம் என்பதே உண்மை.


Next Story

மேலும் செய்திகள்