"கொரோனா மருந்து, முதல் கட்ட சோதனை தொடக்கம்" - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

கொரோனாவை குணப்படுத்தும் மருந்திற்கான முதல் கட்ட மருத்துவ பரிசோதனை ஒரு நோயாளி மீது வெற்றிகரமாக தொடங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா மருந்து, முதல் கட்ட சோதனை தொடக்கம் - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
x
இது தொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர்  டிரம்ப், இது, மருத்துவ துறை வரலாற்றிலேயே அதிவிரைவான மருந்து தயாரிப்பு என பெருமிதம் தெரிவித்தார். மேலும், கொரோனா தடுப்பு சிகிச்சை முறைகள் மற்றும் அது தொடர்பான இதர சிகிச்சைகளை உருவாக்கும் முயற்சியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அதில், நம்பகமான சில முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க மக்கள் அனைவரும், கல்வி கற்பது முதல் அலுவல் பணி செய்வது வரை வீட்டில் இருந்தே செய்ய அறிவுறுத்தப்படுவதாக கூறிய டிரம்ப், உணகவங்களில் உண்பது மற்றும் தேவையற்ற பயணங்கள் ஆகியவற்றை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்