உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 3168 ஆக உயர்வு

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 168 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 3168 ஆக உயர்வு
x
சீனாவின் உஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகில் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைராசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 2 ஆயிரத்து 943 பேர் உயிரிழந்துள்ளனர். 47 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 168 ஆக அதிகரித்துள்ளது. 92 ஆயிரத்து 880 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 48 ஆயிரத்து 494 பேர் சிகிச்சை பெற்று கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என்று உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டிலிருந்து பணியாற்றுமாறு டிவிட்டர் நிர்வாகம் அதன் ஊழியர்களை கேட்டு கொண்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்