நோபல் பரிசுகள் வழங்கும் விழா - பரிசை பெற்றுக்கொண்ட அபிஜித் பேனர்ஜி

விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் நினைவு தினத்தையொட்டி நேற்று பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நோபல் பரிசுகள் வழங்கும் விழா - பரிசை பெற்றுக்கொண்ட அபிஜித் பேனர்ஜி
x
விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் நினைவு தினத்தையொட்டி நேற்று பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதனையொட்டி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில் மன்னர் கார்ல் குஸ்டாஃப், ராயல் ஸ்வீடிஷ் அகாடமி உறுப்பினர்கள் மற்றும் பரிசு வென்றவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். அப்போது, பரிசுகளை வென்றவர்களுக்கு ஸ்வீடன் மன்னர் விருதுகளை வழங்கி கவுரவித்தார். அதன்படி, இயற்பியலுக்கான நோபல் பரிசு, ஜேம்ஸ் பீப்ல்ஸ், மைக்கேல் மேயர், டிடியர் குவெலாஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. வேதியியலுக்கான பிரிவில், லித்தியம் பேட்டரியை உருவாக்கிய ஜான் குட்எனாஃப், ஸ்டான்லி விட்டிங்ஹாம், அகிரா யோஷினோவுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதேபோல், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, இந்தியாவின் அபிஜித் பேனர்ஜி, எஸ்தர் டஃபலோ மற்றும் மைகேல் க்ரெமெருக்கு வழங்கப்பட்டது.  மருத்துவத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் வில்லியம் கேலின், கிரேக் செமென்சா, பீட்டர் ராட்கிளிப்-க்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.  இலக்கியத்திற்கான பரிசு,  போலாந்தின் ஓல்கா டோகார்ஸுக், ஆஸ்திரியாவின் பீட்டர் ஹேண்ட்கேபுவக்கு அளிக்கப்பட்டது. முன்னதாக, நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த விழாவில்,  எரித்ரியாவுடன் அமைதியை ஏற்படுத்தியதற்காக, எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமதுவுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்