ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகும் பிரிட்டன்-புதிய ஒப்பந்தத்தை எட்டிய பிரதமர் போரிஸ்
ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவது தொடர்பான புதிய ஒப்பந்தத்தை பிரிட்டன் வெற்றிகரமாக எட்டியது.
ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவது தொடர்பான ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் ஏற்காததால் தெரசா மே , பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள போரிஸ் ஜான்சன், தயாரித்துள்ள புதிய ஒப்பந்தத்துக்கு பெரும்பாலான ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளது. எனினும் நாளை சனிக்கிழமை இந்த ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் அனுமதி அளித்தால் மட்டுமே ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலக முடியும். எனவே அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெறும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மேற்கொண்டுள்ளார். ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான காலக்கெடு அக்டோபர் 31ஆம் தேதி வரை முடிவடைகிறது.
Next Story