விடுதலைப்புலிகளின் கொடிகள், சீரூடைகள் மீட்பு - முள்ளியவாய்க்கால் பகுதியில் திடீர் பரபரப்பு

இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் கொடிகள் சீருடைகள் மீட்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் கொடிகள், சீரூடைகள்  மீட்பு - முள்ளியவாய்க்கால் பகுதியில் திடீர் பரபரப்பு
x
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் ஒருவர் தனது நிலத்தினை கனரக இயந்திரம் கொண்டு துப்பரவு பணியை மேற்கொண்டுள்ளார். அப்போது நிலத்தில் புதைந்து கிடந்த பை ஒன்று வெளியில் வந்துள்ளது. இதனை பார்த்த போது அதில் விடுதலைப்புலிகளின் சீருடைகள் மற்றும் கொடிகள் இருந்துள்ளன. இது குறித்து முல்லைத்தீவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விடுதலைப்புலிகளின் இரண்டு புலிக்கொடிகளையும் மற்றும் இராணுவ சீருடைகள் இரண்டும்  தொப்பிகளையும் மீட்டுள்ளனர்.
இதில் சிறுவர் அளவில் இராணுவ சீருடையும்,  பெரியவர்களின் அளவிலும் இருந்துள்ளது. விடுதலை புலிகளின் கொடி சீருடை மீட்டு எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்