ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் 42 வது கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப பாகிஸ்தான் திட்டம்

இன்று துவங்கியுள்ள ஐநா மனித உரிமை ஆணையத்தின் 42 வது கூட்டத்தில், காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ள நிலையில், அதனை முறியடிக்க இந்தியா முழுவீச்சில் தயாராகி வருகிறது.
ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் 42 வது கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப பாகிஸ்தான் திட்டம்
x
ஐ நா மனித உரிமை ஆணையத்தின், 42 வது கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது.  ஐநா மனித உரிமை ஆணையர், வருடாந்திர அறிக்கையை வாசித்து இந்த கூட்டத்தை துவக்கி வைக்கிறார்.

வருகிற 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில், காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப பாகிஸ்தான் தயாராகி வருகிறது.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது, தலைமையில் உள்ள குழு, இந்த விவகாரத்தை, பூதாகரமாக்க, திட்டமிட்டுள்ளது. 

ஆனால் இந்தியாவை பொறுத்தவரை அதிகாரிகள் மட்டத்திலேயே அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 

காஷ்மீர் விவகாரத்தில் ஜப்பான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ்,  நேபாளம், எகிப்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படும் என தெரிகிறது. 

அதே நேரம் பாகிஸ்தானில் நடைபெறும் மனித உரிமை மீறல் குறித்து இந்த கூட்டத்தில், முக்கிய ஆதாரங்களை இந்தியா வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்