சந்திரயான் - 2க்கு பாகிஸ்தான் விண்வெளி வீரர் பாராட்டு

சந்திரயான் 2 விண்கலம் மூலம் விக்ரம் லேண்டரை தரையிறக்கிய இஸ்ரோ மற்றும் அதன் பணிகளை ஊக்குவித்த பிரதமர் மோடிக்கு, பாகிஸ்தான் விண்வெளி வீரர் நமீரா சலீம் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
சந்திரயான் - 2க்கு பாகிஸ்தான் விண்வெளி வீரர் பாராட்டு
x
நிலவின் தென்பகுதிக்கு சந்திரயான் 2 விண்கலம் மூலம் விக்ரம் லேண்டரை தரையிறக்கிய இஸ்ரோ மற்றும் அதன் பணிகளை ஊக்குவித்த பிரதமர் மோடிக்கு, பாகிஸ்தான் விண்வெளி வீரர் நமீரா சலீம் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த முயற்சி தெற்காசிய நாடுகளுக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளதாகவும், இது இந்த மண்டலத்துக்கும் மட்டுமல்லாது சர்வதேச விண்வெளித்துறைக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எந்த நாடு இந்த சாதனையை படைத்தது என்பதை விட, விண்வெளியில் அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் ஒன்றுதான் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த விண்வெளி வீரர் இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்