ஐ.நா. கூட்டத்தில் போர் குற்ற விசாரணைக்கு வலியுறுத்தல்

ஈழத்தில் நடைபெற்ற போர் குற்றங்கள் குறித்து விசாரிக்குமாறு, ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐ.நா. கூட்டத்தில் போர் குற்ற விசாரணைக்கு வலியுறுத்தல்
x
* ஜெனீவாவில் இன்று தொடங்கும், ஐநா மனித உரிமை ஆணையத்தின் 42வது கூட்டத்தில், ஈழத் தமிழர்கள் மீதான இனப் படுகொலை தாக்குதல் குறித்து விசாரிக்க வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

* தனி வாழ்வா, சக வாழ்வா, தனி நாடா, சுயநிர்ணய உரிமை, ஒரு நாடு இரு தேசம் என்ற பிரச்சனைகள் குறித்து  பொது வாக்கெடுப்பு நடத்துதல், இறுதிப் போரில் கைதானோர்,  காணாமல் ஆக்கப்பட்டோரை உடனடியாக, அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைத்தல்.

* சிங்களர் பிடியில் உள்ள தமிழர்களின் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளை முறையாக திருப்பி அளித்தல், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து சிங்கள ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

* இன அழிப்பு குற்றத்துக்காக லைபீரிய அதிபர் சார்லஸ் டெயிலர், செர்பிய குடியரசு தலைவர் மிலோசேவிக், சூடான் அதிபரான ஓமர் அல் பஷீர் மீதான விசாரணை போல், ராஜபக்ச மீதும் விசாரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
Next Story

மேலும் செய்திகள்