இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவவில்லை - இலங்கை ராணுவம், கடற்படை விளக்கம்

இலங்கையிலிருந்து தீவிரவாதிகள் 6 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாக வெளியான தகவலை ஏற்க முடியாது என இலங்கை கடற்படையும், அந்நாட்டு இராணுவமும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவவில்லை - இலங்கை ராணுவம், கடற்படை விளக்கம்
x
இலங்கையிலிருந்து தீவிரவாதிகள் 6 பேர், இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாக வெளியான தகவலை ஏற்க முடியாது என இலங்கை கடற்படையும், அந்நாட்டு இராணுவமும், கடற்படையும் தெரிவித்துள்ளது.தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கை கடற்படை பேச்சாளர்  சூரிய பண்டார, தங்கள் நாட்டு கடற்படையினர் 24 மணிநேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார். இதனால், தீவிரவாதிகள் இலங்கையில் இருந்து கடல்மார்க்கமாக தப்பிச் செல்ல வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார். இதேபோல, இலங்கையிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்கு ஊடுருவி உள்ளது தொடர்பான தகவலை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்தும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்