மசூதியில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு - 5 பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குச்லெக் என்ற இடத்தில் ஒரு மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தபோது, சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.
மசூதியில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு -  5 பேர் பலி
x
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குச்லெக் என்ற இடத்தில் ஒரு மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தபோது, சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. பயங்கர சத்தத்துடன் வெடித்த இந்த குண்டுவெடிப்பில் சிக்கி, 5 பேர் உடல் சிதறி பலியானார்கள். காயம் அடைந்த 20 க்கும் மேற்பட்டோர், மீட்கப்பட்டு, உள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு , இதுவரை எந்தவொரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

Next Story

மேலும் செய்திகள்