குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இன்று தீர்ப்பு...

பாகிஸ்தான் ராணுவ நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று பிற்பகல் தீர்ப்பு வெளியாகிறது.
குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இன்று தீர்ப்பு...
x
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் கைதுசெய்யப்பட்டு தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு, அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த தீர்ப்பு, இந்தியாவில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ரகசிய விசாரணை அடிப்படையிலான தீர்ப்பை ஏற்க முடியாது என இந்தியா தனது எதிர்ப்பை கடுமையாக பல்வேறு நிலைகளில் பதிவு செய்தது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று பிற்பகல் தீர்ப்பு வெளியாகிறது. 

Next Story

மேலும் செய்திகள்