தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா உதவும் - அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் பிரதமர் மோடி உறுதி

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா உதவும் -  அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் பிரதமர் மோடி உறுதி
x
இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரதமர் மோடிக்கு வெள்ளை தேக்கால் ஆன புத்தர் சிலையை சிறிசேன பரிசாக வழங்கினார். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட மோடி, பின்னர் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விருந்தில் பங்கேற்றார். இதையடுத்து சிறிசேன உடனான சந்திப்பு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, 10 நாட்களில் நண்பர் சிறிசேன உடனான இரண்டாவது சந்திப்பு இது என்றும் தீவிரவாதம் என்பது இருநாடுகளுக்குமே அச்சுறுத்தல் என்றும்  குறிப்பிட்டுள்ளார்.   இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என உறுதி அளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தீவிரவாதத்தை வேரறுக்க இருநாடுகளும் இணைந்து பாடுபட வேண்டும் என்று பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் கூட்டு முயற்சி




இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்‌ஷேவை சந்தித்து பேசினார். அப்போது, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இருநாட்டின் கூட்டு முயற்சிக்கான தேவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மோடியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பு



இலங்கை சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். அதிபர் சிறிசேனாவுடன், இருதரப்பு உறவு குறித்து மோடி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சம்பந்தன் தலைமையிலான நிர்வாகிகள், மோடியை சந்தித்துப் பேசினர். அப்போது விடுதலைப் புலிகள் வீழ்ந்த பின்னர், வெளியேற்றப்பட்ட தமிழர்களை, மீண்டும் அவர்களது இருப்பிடத்திலேயே குடியேற்றுவது உள்ளிட்ட இலங்கை தமிழர் நலன் குறித்து பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்