வெளிநாட்டினர் 600 பேர் நாடு கடத்தல் : விசா காலம் முடிந்தது - இலங்கை அரசு அதிரடி

வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் அவசரநிலையை பிறப்பித்துள்ள இலங்கை அரசு, இஸ்லாமிய மதகுருக்கள் உள்பட வெளிநாட்டினர் 600 பேரை அரசு அதிரடியாக நாடு கடத்தி உள்ளது
வெளிநாட்டினர் 600 பேர் நாடு கடத்தல் : விசா காலம் முடிந்தது - இலங்கை அரசு அதிரடி
x
வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் அவசரநிலையை பிறப்பித்துள்ள இலங்கை அரசு, இஸ்லாமிய மதகுருக்கள் உள்பட வெளிநாட்டினர் 600 பேரை அரசு அதிரடியாக நாடு கடத்தி உள்ளது. இலங்கையில், ஈஸ்டர் பண்டிகையின் போது, அடுத்தடுத்து நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதல், உலகையே உலுக்கியது. இதையடுத்து அந்நாட்டு அரசு ராணுவத்துக்கும், போலீசாருக்கும் அதிக அதிகாரம் கொடுத்து குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை வேட்டையாட பணித்து உள்ளது. அதன்படி இந்த தாக்குதல் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது ஒருபுறம் இருக்க, வெளிநாட்டினருக்கான குறிப்பாக மத பிரசாரகர்களுக்கான விசா நடைமுறைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை இலங்கை அரசு கொண்டு வந்திருக்கிறது. அதன்படி இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் பலர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இதில் விசா காலம் முடிந்தபிறகும் தங்கியிருப்போர் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வெளிநாடுகளை சேர்ந்த 600 பேர் அதிரடியாக நாடு கடத்தப்பட்டு உள்ளனர். இதில் 200 பேர் இஸ்லாமிய மதகுருக்கள் ஆவர். அவர்களிடம் இருந்து அபராதமும் வசூலிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் சட்டப்பூர்வமாக இலங்கைக்கு வந்திருந்தாலும், தற்போது நடத்தப்பட்ட சோதனையில் அவர்களின் விசா காலம் முடிந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் வஜிரா அபய்வர்தனே தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்