உத்தரதேவி அதிவிரைவு சொகுசு ரயில் சேவை : அதிபர் மைத்ரிபால சிறிசேனா தொடங்கி வைத்தார்

இந்திய அரசு நிதியுதவியில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உத்தர தேவி அதி விரைவு சொகுசு ரயிலின் முதல் சேவை நேற்று, இலங்கை தலைநகர் கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தொடங்கியது.
உத்தரதேவி அதிவிரைவு சொகுசு ரயில் சேவை : அதிபர் மைத்ரிபால சிறிசேனா தொடங்கி வைத்தார்
x
இந்திய அரசு நிதியுதவியில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உத்தர தேவி அதி விரைவு சொகுசு ரயிலின் முதல் சேவை நேற்று, இலங்கை தலைநகர் கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தொடங்கியது. கோட்டை ரயில் நிலையத்தில் நடந்த தொடக்க விழாவில்,  புதிய  சேவையை அதிபர் மைத்ரிபால சிரிசேனா தொடங்கி வைத்தார். காலை 11 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில், பிற்பகல் 2.40 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது.
கிளிநொச்சி - அறிவியல் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில் நிலையத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, யாழ்.மாநகர முதலமைச்சர் இமானுவேல் ஆனோல்ட்  மற்றும் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை  தூதர் பாலசந்தர் ஆகியோர் வரவேற்றதுடன் கிளிநொச்சியில் இருந்தது யாழ்ப்பாணம் வரை பயணம் செய்தனர்.யாழ்ப்பாணத்தில் பிரதான ரயில் நிலையத்தில் இந்த ரயிலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்