சீனாவில் வரலாறு காணாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு
சீனாவில் வரலாறு காணாத பனிப்பொழிவால், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் வரலாறு காணாத பனிப்பொழிவால், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, தென்மேற்கு மற்றும் மத்திய சீனாவில், பல பகுதிகளில், சாலைகளில் குவிந்துள்ள பனியால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. சாலையில் குவிந்துள்ள பனியை அகற்றும் பணியில், சுமார் ஆயிரம் வாகனங்களும், 3 ஆயிரத்து 600 பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக விமான சேவையும் பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது. வெட்பநிலையும் மைனஸ் 3 டிகிரி செல்சியசுக்கு கீழே சென்றதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
Next Story

