போர் விமானங்கள் தாங்கிய அமெரிக்க கப்பல் ஈரான் கடல் பகுதியில் சென்றதால் போர் பதற்றம்

போர் விமானங்கள் தாங்கிய அமெரிக்க கப்பல் ஒன்று, ஈரான் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள வளைகுடா கடல் பகுதியில் சென்றதால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
போர் விமானங்கள் தாங்கிய அமெரிக்க கப்பல் ஈரான் கடல் பகுதியில் சென்றதால் போர் பதற்றம்
x
போர் விமானங்கள் தாங்கிய அமெரிக்க கப்பல் ஒன்று, ஈரான் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள வளைகுடா கடல் பகுதியில் சென்றதால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் அணு ஆயுத திட்டங்களை கட்டுப்படுத்த அமெரிக்கா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் தன் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் நீர் வழி பகுதியை மூடிவிடுவோம் என்று ஈரான் எச்சரித்து வருகிறது. உலகின் 3ல் ஒரு பங்கு கச்சா எண்ணெய் இந்த வழியாகத்தான் கப்பல்களில் கொண்டு செல்லப்படுகிறது. அமெரிக்கா - ஈரான் இடையே நிலவி வரும் இந்த மோதல் போக்கு காரணமாக ஏற்கனவே  பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில்,ஈரான் கடல் பகுதியில் போர் விமானங்கள் தாங்கிய அமெரிக்க கப்பல் ஒன்று சென்றதால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்