கொட்டி தீர்த்த கனமழையால் கடும் வெள்ளம் - 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இலங்கையின் வட மாகாணங்களில் கொட்டி தீர்த்த கன மழை மற்றும் வெள்ளத்தால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொட்டி தீர்த்த கனமழையால் கடும் வெள்ளம் - 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
x
இலங்கையின் வட மாகாணங்களில் கொட்டி தீர்த்த கன மழை மற்றும் வெள்ளத்தால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் வட மாகாண பகுதிகளான யாழ் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள் அனைத்தும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளதால் மக்கள் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதேபோல் சில கிராமங்களில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.  கிளிநொச்சி மாவட்டத்தில் வீட்டுக்குள் இருந்த நிலையில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். இதே போல் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் பலத்த மழையின் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராணுவத்தினர் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்