7 வயது சிறுவனின் அபார பந்து வீச்சு - ஷேன் வார்னே பாராட்டிய காஷ்மீர் சிறுவன்

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 7 வயது சிறுவன், ஆஸ்திரேலியாவின் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசும் அளவிற்கு, ஒரே பந்தில் பிரபலமாகியுள்ளான்
7 வயது சிறுவனின் அபார பந்து வீச்சு - ஷேன் வார்னே பாராட்டிய காஷ்மீர் சிறுவன்
x
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 7 வயது சிறுவன், ஆஸ்திரேலியாவின் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசும் அளவிற்கு, ஒரே பந்தில் பிரபலமாகியுள்ளான். இந்த சிறுவன், ஸ்பின் பவுலிங் போட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இடது கை பேட்டிங் ஆடிய சிறுவனை அபாரமான ஸ்பின் பந்தில் கிளீன் போல்டாக்கினான் அந்த சிறுவன். அந்த விக்கெட்டை சிறுவனுடன் இணைந்து அவனது அணி சிறுவர்கள் கொண்டாடுகின்றனர். இந்த வீடியோவை நூற்றாண்டின் சிறந்த பந்து என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை கண்ட ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே, 
அந்த சிறுவனை பாராட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்