"இலங்கை அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு" - அதிபர் சிறிசேனா கூறியதாக சபாநாயகர் தகவல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அதிபர் சிறிசேனா கூறியதாக நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு - அதிபர் சிறிசேனா கூறியதாக சபாநாயகர் தகவல்
x
இலங்கை அதிபர் சிறிசேனாவை அவரது அலுவலகத்தில்,  சபாநாயகர் கரு ஜயசூரிய சந்தித்தார். அப்போது, இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணப்படும் என சிறிசேனா கூறியதாக  சபாநாயகர் அலுவலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

இலங்கை உறுதியற்ற நிலையை எதிர் கொண்டுள்ளதாகவும், தொழில் முதலீடுகள் மற்றும் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிபர் சிறிசேனாவிடம் சபாநாயகர் வலியுறுத்தியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே இலங்கை அதிபர் சிறிசேனா இன்று ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். அப்போது அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. 

Next Story

மேலும் செய்திகள்